சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெரு அரசுத் தலைவர் டினா பொலுவார்டே ஆகியோர் நவம்பர் 14ஆம் நாளிரவு லிமாவின் அரசுத் தலைவர் மாளிகையில் இருந்து காணொளி மூலம் சான்கே துறைமுகத்தைத் திறந்து வைத்தனர்.
அப்போது சில ஆண்டுகளாக நவீனமயமாக்கத் துறைமுகம் உற்சாகத்துடன் வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஷிச்சின்பிங், சான்கே துறைமுகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் இயக்கும் பணிகளில் கூட்டாக பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், கூட்டு ஆலோசனை, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டாக அனுபவிப்பதில் ஊன்றி நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சீனா, பெரு உள்ளிட்ட பசிபிக் கடலோர பொருளாதாரங்களின் கூட்டு வளர்ச்சி, அனைத்து நாடுகளின் மக்களுக்கும் அதிக பயன்களையும் மனநிறைவையும் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.