நெய்வேலி NLC நிறுவனத்தின் முதல் அனல் மின்நிலையம் (Cooling Tower) இடிக்கும் பணி தற்போது தொடங்கியது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1962-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது.
இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த முதல் அனல் நிலையத்தை இடிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.
இடிக்கப்படும் இந்த அனல்மின் நிலையத்திற்கு ஆயுட்காலம் 22 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சில வருடங்களுக்கு முன்னர், அந்தக் கட்டமைப்பை புதுப்பித்து மீண்டும் செயல்படுத்தப்பட்டது என உத்தரவிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மூடப்பட்ட மின் நிலையம் தற்போது இடிக்கப்படுகிறது.