அங்குதான் முதலாவது ஆய்வுப் பயணத்தையும் அவர் மேற்கொண்டார்.
அப்பயணத்தின்போது, சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேற்கொள்வது சரியான பாதை, அதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாட்டையும் மக்களையும் செழிப்படையச் செய்யும் பாதையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
அதன்பின், தற்போது 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சீர்திருத்தத்தின் ஒட்டுமொத்த திசை மற்றும் அதன் நடைமுறையாக்கம் ஆகியவற்றுக்கு ஷிச்சின்பிங் தொடர்ந்து திட்டங்களை வகுத்து வருகிறார்.
புதிய யுகத்தில் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவதற்கு 2024 முக்கியத்துவம் வாயந்ததாகும். சீர்திருத்தத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும் விதம் 140 கோடி மக்களைக் கொண்ட நாட்டை ஷிச்சின்பிங் வழிநடத்திச் செல்கிறார்.