சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங் 15ஆம் நாள் பெரு நாட்டின் லீமாவில் தாய்லாந்தின் தலைமையமைச்சர் பேடோங்டர்ன் ஷினவத்ரா அம்மையாரைச் சந்தித்தார். அடுத்த ஆண்டு சீன-தாய்லாந்து தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பொன்விழா ஆண்டு நிறைவாகும்.
இருநாட்டுப் பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானம் மேலும் அதிக வளர்ச்சி பெற விரைவுபடுத்த வேண்டுமென இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
ஷிச்சின்பிங் கூறியதாவது:
புதிய வரலாற்று துவக்கத்தில் நின்று, சீன-தாய்லாந்து பாரம்பரிய நட்புறவை வளர்ந்து, வர்த்தக முதலீடு, பரஸ்பர தொடர்பு மற்றும் ஒன்றிணைப்பு, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், பண்பாடு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இருநாட்டு பொது எதிர்காலச் சமூகக்கட்டுமானம் அடுத்த 50 ஆண்டுகளில் மாபெரும் சாதனைபெற முயற்சிக்கும் என்று குறிப்பிட்டார்.