GetApps இனி கிடையாது; போன்பேயின் இண்டஸ் ஆப் ஸ்டோருடன் இணைகிறது ஜியோமி  

Estimated read time 1 min read

ஜியோமி நிறுவனம் ஆனது இந்தியாவில் உள்ள தனது GetApps ஸ்டோரை இண்டஸ் ஆப் ஸ்டோருடன் மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
இது பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் ஒழுங்குமுறை கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் நாட்டிலுள்ள அனைத்து ஜியோமி, ரெட்மி மற்றும் போகோ சாதனங்களிலும் ஜனவரி 2025 இல் வெளியிடப்படும்.
GetApps ஊடுருவும் விளம்பரங்கள் மற்றும் சிஸ்டம் ப்ளோட் ஆகியவற்றிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது.
இது ஜியோமி இண்டஸ் ஆப்ஸ்டோரை நோக்கிச் செல்ல தூண்டியது. இண்டஸ் ஆப் ஸ்டோர் போன்பே மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஆப் ஸ்டோரானது இந்திய நுகர்வோருக்கு ஏற்றவாறு உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் பயனர் நட்பு இன்டெர்பேஸை வழங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author