சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இஸ்ரோவுக்கு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 2.54 ரூபாய் வருமானம் கிடைப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆலோசனை நிறுவனமான நோவாஸ்பேஸ் தயாரித்த ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்க பகுப்பாய்வு’ என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் அளித்த ஒரு பேட்டியில், “ஏழை அல்லது பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி இஸ்ரோ உண்மையில் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் தொட்டுள்ளது.
விண்வெளி திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடு சமூகத்திற்கு பெரிதும் பயனளித்துள்ளது.” என்று 2.5 மடங்கு வருவாயைக் குறிப்பிட்டு தெரிவித்தார்.