பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, தொலைதூர கிராமங்கள் கூட அத்தியாவசிய தொழில்நுட்பங்களை அணுக வேண்டும் என்ற தனது லட்சியத்தை வெளிப்படுத்தினார்.
“உலகம் முழுவதும் டிஜிட்டல் பிளவு பற்றி நான் கேள்விப்பட்டபோது, இந்தியாவில் இதுபோன்ற எதுவும் நடக்காது என்று நான் முடிவு செய்தேன்,” என்றுபிரதமர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.