சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஃபாங்ஷேன், மென்டோகோ மற்றும் சாங்பிங் பகுதிகளில் ஆகஸ்ட் 7ஆம் நாள் காலை 8மணி வரை வெள்ளப் பாதிப்பால் மின்சாரத் தடை ஏற்பட்ட 270 கிராமங்களில் 124 கிராமங்களின் மின்சாரம் மீட்சி பெற்றுள்ளது. 90 கிராமங்களில் மின்னாக்கி மூலம் அவசர மின்சாரம்
கிடைத்துள்ளது. மின்சாரம் மீட்சியுற்ற விகிதம் 79விழுக்காட்டை எட்டியுள்ளது.
மேலும், ஹெபெய் மாநிலத்தின் சுவோட்சோ நகரின் மைய நகரப்புற பகுதியிலுள்ள மின்சார விநியோகம் மீட்சி பெற்றுள்ளது. எரிவாயு நிலையம், பெரிய பேரங்காடி உள்ளிட்ட பொது சேவை நிலையங்கள் அடிப்படையாக மீண்டும் சேவையளித்துள்ளன.
ஆகஸ்ட் 7ஆம் நாள் 6மணி வரை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் மொத்தம் 1லட்சத்து 10ஆயிரத்து 600 வீடுகள் மீண்டும் மின்சாரம் பெற்றுள்ளன. ஜிலின் மாநிலத்தில் 1லட்சத்து 22ஆயிரத்து 200 வீடுகள் மீண்டும் மின்சாரம் பெற்றுள்ளன.