புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், மாநில அரசின் முழுமையான கண்காணிப்பில் போட்டி நடத்தப்படும் என்று கூறினார்.
“இந்த உயர்மட்ட கால்பந்து நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து நிதி உதவியும் மாநிலத்தின் வணிகர்களால் வழங்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.
இந்த வரலாற்று நிகழ்வை நடத்தும் கேரளா மாநிலம் வெற்றிகரமாக நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மெஸ்ஸி கடைசியாக 2011 ஆம் ஆண்டு வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்பு போட்டியில் அர்ஜென்டினா பங்கேற்ற போது இந்தியாவில் விளையாடினார்.