வெளிநாடுகளுக்கான சீன தூதர்களைச் சந்தித்த ஷி ச்சின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 29ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கான தூதர் பணிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தூதர்களையும் சந்தித்து, முக்கிய உரை நிகழ்த்தினார்.


புதிய யுகத்தில் சீன தூதாண்மை பணி எட்டியுள்ள சாதனைகளை ஷி ச்சின்பிங் பாராட்டினார்.அவர் கூறுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சியையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வெளிவிவகார பணிக் கூட்டத்தின் எழுச்சியையும் தூதர்கள் நடைமுறைப்படுத்தி, சீன பாணியுடைய தூதாண்மை பணியின் புதிய நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.


சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வெளிவிவகார பணிக் கூட்டத்தின் திட்டத்தை அனைவரும் நடைமுறைப்படுத்தி, தொடக்க கால நம்பிக்கையை வலுப்படுத்தி, பொறுப்புடன் தேசிய நலனைப் பேணிக்காத்து, பன்முகங்களிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைக் கடினமாக நிர்வாகிக்கும் பணியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்

Please follow and like us:

You May Also Like

More From Author