தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படிக்கக்கூடிய ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறவும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் இந்த விண்ணப்பத்தை நிரப்பி ரூ. 50 கட்டணத்துடன் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் நிலையில் வெற்றி பெறுபவர்களுக்கு உதவி தொகையும் வழங்கப்பட இருக்கிறது என்பதால் மாணவர்கள் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.