மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்கான மினி ஏலமாக நடத்தப்படும் இதில் ஒவ்வொரு அணி உரிமையாளர்களிடமும் ₹15 கோடி பர்ஸ் இருக்கும். இது கடந்த ஆண்டு 13.5 கோடி ரூபாயாக இருந்தது.
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியா தஹுஹு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டியான்ட்ரா டாட்டிங் ஆகியோர் ஏலத்தில் இடம்பெறும் சில முன்னணி வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர்.
ஆல்-ரவுண்டர் ஸ்னே ராணா, லெகி பூனம் யாதவ் மற்றும் பேட்டர் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியமான இந்திய வீராங்கனைகள் ஆவர்.