5 நாட்கள் நீடித்த இரண்டாவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 30ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. நடப்பு பொருட்காட்சியில் 6700க்கும் அதிகமான ஒத்துழைப்பு விருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நடப்புப் பொருட்காட்சி நடைபெற்ற போது, “தொழில் சங்கிலி மற்றும் வினியோக சங்கிலி தொடர்பான சர்வதேச ஒத்துழைப்புக்கான பெய்ஜிங் ஆலோசனை”, “உலகளாவிய வினியோக சங்கிலியின் முன்னேற்ற அறிக்கை 2024” முதலியவை வெளியிடப்பட்டன.
புதிதாக அமைக்கப்பட்ட முன்னேறிய தயாரிப்பு சங்கிலியின் காட்சி அரங்கு உள்ளிட்ட அரங்குகளில் உலகின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம், தொழில் புத்தாக்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிய புதிய சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்பொருட்காட்சியின் போது, சீனா மற்றும் வெளிநாட்டு வணிகர்கள், 37 ஆயிரத்துக்கும் அதிகமான வினியோக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு உறவை உருவாக்கியுள்ளன என்று தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.