சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகத்தின் சேவைத் துறை புலனாய்வு மையமும் சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனமும் நவம்பர் 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் நவம்பரில் தயாரிப்புத் தொழில் கொள்வனவு மேலாளர் குறியீடு 50.3 விழுக்காடு ஆகும். இது அக்டோபரில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தயாரிப்புத் தொழில் உற்பத்தி மற்றும் சந்தை தேவை மேம்பாட்டுடன், அண்மையில் தொழில் நிறுவனங்களின் கொள்வனவு செயல்பாடு விரைவாகி வருகிறது. கொள்வனவு அளவு குறியீடு 51 விழுக்காடாக இருந்து விரிவாக்க இடைவெளியில் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே காலத்தில் சந்தை மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து சீராக இருந்தது. உற்பத்தி மற்றும் நிர்வாகச் செயல்பாடு மீதான எதிர்பார்ப்பு குறியீடு 54.7 விழுக்காடாகும். இது அக்டோபரில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்தது. தயாரிப்புத் தொழிலின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எதிர்கால சந்தை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் வலுப்பட்டுள்ளது.