உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் 39வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்  

உலக கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) 2024 வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி, உலகின் 133 பொருளாதாரங்களில் 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள 10 பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் முதல் இடத்திலும் தொடர்கிறது.
கடந்த ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் இந்தியா 40வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததோடு, இந்தியாவின் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரால் இயக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author