மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் ஜனவரி 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 ஜனவரி 4ஆம் தேதி தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு டிசம்பர் 16ஆம் தேதி ராகுல் காந்திக்கு எம்பி-எம்எல்ஏ கோர்ட் சம்மன் அனுப்பியதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் மிஸ்ராவின் வழக்கறிஞர் சந்தோஷி பாண்டே தெரிவித்தார். நவம்பர் 18-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் யாதவ், அடுத்த விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்ததாகவும், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதாகவும் பாண்டே கூறினார்.
