இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.
நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில்,”நான் பெர்த்துக்கு வந்தபோது தான் இதைக் கேட்டேன்,” என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அஸ்வினின் ஓய்வு எண்ணத்தை குறித்து வெளிப்படுத்தினார்.
“எனினும், டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நான் அங்கு இல்லை. ஆனால் அந்த எண்ணம் அவருடைய மனதில் ஏற்கனவே இருந்தது.”