சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 23வது சந்திப்பு டிசம்பர் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனத் தரப்பின் சிறப்புப் பிரிதிநிதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினருமான வாங்யீ, இந்திய தரப்புச் சிறப்புப் பிரதிநிதியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான தோவலுடன், சீன-இந்திய எல்லை பிரச்சினை மற்றும் இரு தரப்புறவு குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாற்றிக் கொண்டார்.
வாங்யீ கூறுகையில், இவ்வாண்டின் அக்டோபர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் காசான் நகரில் சந்திப்பு நடத்தி, இரு நாட்டுறவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து முக்கிய ஒத்தக் கருத்துகளை எட்டியுள்ளார்.
சீனா மற்றும் இந்தியா, உலகத்தின் புதிய வளரும் நாடுகளின் பிரதிநிதிகளாகவும், தெற்குலகத்தின் முக்கிய நாடுகளாகவும் திகழ்கின்றன. இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும், தெற்குலக நாடுகளின் வளர்ச்சிப் போக்கிற்கும் பொருந்தியது என்றார்.
மேலும், இரு தரப்பும் மனம் திறந்து தொடர்பு கொண்டு, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்தக் கருத்துகளை அதிகரித்து, ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றும், எல்லை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காத்து, இரு நாட்டுறவு வெகுவிரைவில் இயல்பான பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.
தோவல் கூறுகையில், புதிய வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், எல்லை பிரச்சினை உகந்த முறையில் தீர்க்கப்பட்டு வருகிறது.
சீனாவுடன் பயனுள்ள தொடர்புகளை நிலைநிறுத்தி, எல்லை பிரச்சினையின் இறுதி தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.
தவிரவும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாற்றிக் கொண்டனர்.