திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கன் துறை அருகே தனியார் கல்குவாரிய அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர், வட்டாட்சியர், காவல்துறையினர் விபத்து நடந்த கல்குவாரிக்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.