இலக்கிய படைப்பாளிகளைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கியங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயுடன் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதாளர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழில் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் 1908 என்ற ஆய்வு நூலுக்காக பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதி டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.