பத்திரிகையாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பத்திரிகையாளர் குடும்ப நிதியை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதாவது பத்திரிகையாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இறந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, 15 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.7.5லட்சம், 10 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், 5 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.