ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர்.
தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் முன்பதிவு செய்து பலர் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
அதிகரித்த பயணத்தை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் ஆம்னி சேவைகளை மேம்படுத்தி, கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகின்றன.
குறிப்பாக, மாதவரம், தாம்பரம், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் கூட்டம் மிகுந்துள்ளது.
போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக செய்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் பாதுகாப்பாக புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.