சின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜிமுசார் தேசிய நிலை களிப்பாறை எண்ணெய் முன்மாதிரி மண்டலத்தின் தினசரி உற்பத்தி அதிகபட்சமாக 5 ஆயிரம் டன்னை முதன்முறையாக தாண்டி, வரலாற்று பதிவாகியது. சீனாவின் முதலாவது தேசிய நிலை களிப்பாறை எண்ணெய் முன்மாதிரி மண்டலம் இதுவாகும்.
இந்த மண்டலம் சின்ஜியாங்கின் ட்சுன்கேர் வடிநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 1278 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் உள்ள வள அளவு 100 கோடி டன்னைத் தாண்டியுள்ளது.
சின்ஜியாங் எண்ணெய் வயல் கூட்டு நிறுவனத்தின் ஜி சிங் கிளையின் மேலாளர் து சியேவ்பியாவ் கூறுகையில், 2025ஆம் ஆண்டு ஜிமுசர் களிப்பாறை எண்ணெயின் ஆண்டு உற்பத்தி அளவு 17 லட்சம் டன்னுக்கு மேல் எட்டும்.
இந்த எண்ணெய் வயலின் மையத் தொழில் நுட்பமும், மேலாண்மை அனுபவமும், சீனாவில் உள்ள மற்ற களிப்பாறை எண்ணெய் அகழ்வுக்கு “ஜிமுசார் திட்டத்தின் முன்மாதிரி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.