தெற்குலக ஊடகக் கூட்டாளி அமைப்பு முறை நிறுவப்பட்ட கூட்டமும் 13ஆவது உலக காணொளி ஊடகக் கருத்தரங்கும் நவம்பர் 6ஆம் நாள் சீனாவின் சி அன் நகரில் நடைபெற்றது.
பாகிஸ்தான், இலங்கை, உருகுவே ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பினர். 40 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சர்வதேச நிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்களையும், சீனாவுக்கான பல நாடுகளின் தூதாண்மை பிரதிநிதிகளையும் உள்ளட்டக்கிய 300க்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குனருமான ஷென் ஹெய்சியுங் கூறுகையில்,
புதிய கொந்தளிப்பு மற்றும் மாறி வரும் காலக்கட்டத்தில் தற்போதைய உலகம் நுழைந்துள்ளது. உலக ஆட்சி முறை முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்தார். தெற்குலக நாடுகளின் மிக அவசிய தேவைகளில் இது கவனம் செலுத்துகின்றது. தெற்குலக ஊடகக் கூட்டாளி அமைப்பு முறையை சீன ஊடகக் குழுமம் உருவாக்கியது. சீன பாணியுடைய நவீனமயமாக்கம், உலக வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பாகும். சீன ஊடகக் குழுமம், தெற்குலக நாடுகளின் ஊடகக் கூட்டாளிகளுடன் இணைந்து, நியாயமான சகிப்புதன்மை வாய்ந்த சர்வதேச ஒழுங்கைக் கட்டியமைப்பதற்கு பங்காற்ற விரும்புகின்றது என்றார்.
