மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் MT வாசுதேவன் நாயர். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் இருதய பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
இவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் உடல் நலம் மோசமாக உள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகையினர் கவலையில் உள்ளனர். மேலும் இவர் 7 தேசிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.