சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 10 தினங்களாக சரிவை சந்தித்தது. நேற்று வரையில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 60 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,100-க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7740 ரூபாய்க்கும், ஒரு சவரன் 61920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் உயர்ந்து ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 99 ரூபாய் ஆகவும் 1kg வெள்ளி 99 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.