புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஏசி வசதி இல்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்சமாக 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 13 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் 2 ரூபாயும், அதிகபட்சமாக 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, டீலக்ஸ் ஏசி பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 12 ரூபாயிலிருந்து 16 ரூபாயாகவும், அதிகபட்சமாக 36 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு பேருந்து சேவைகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.