“தமிழ்நாடு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல” இ.பி.எஸ்…

Estimated read time 0 min read

அ.தி.மு.க பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம் என்று கூறியுள்ளார்.

அதோடு கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஸ் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்ட தான் திறனில்லை என்று பார்த்தால் அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்க கூட தெம்பில்லாதவராக இருக்கின்றார்.

இதில் வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பை தொட்டியும் அல்ல, என்று கூறியதோடு கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அனைத்து குப்பையாளையும் உடனே அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி இது போன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கு தங்கம் தென்னரசு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தான் தமிழ்நாடே கேரளாவின் குப்பை தொட்டியாகி கிடந்தது. தி.மு.க ஆட்சியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author