தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு 390 கிலோமீட்டர் கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
இது கடந்த 6 மணி நேரத்தில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு அதாவது நாளை காலை 6:00 மணி வரையில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு இன்று மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 25-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கரூர் மற்றும் சிவகங்கையில் பல பல்வேறு மாவட்டங்களில் மழை நேற்று இரவு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.