இந்தியாவின் மொத்த காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இப்போது நாட்டின் புவியியல் பகுதியில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக உள்ளது.
இந்திய நாட்டு வன அறிக்கை 2023 யின்படி (ISFR) இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் காலநிலை இலக்குகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
2005 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் கூடுதளாக 2.29 பில்லியன் டன்கள் கார்பன் குறைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் 2.5-3 பில்லியன் டன் கார்பன் சிங்க்கை அடைவதற்கான இலக்கை நெருங்கி வருகிறது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.