வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர், “அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் குறித்து முதல்வர் முடிவு செய்யப் போகின்றார். அதனை விவாதித்து நிறைவேற்ற சட்டசபை தயார்.” என்றார்.
கடந்த கூட்டத்தில் கவர்னர், அரசின் உரையில் முரண்பாடு இருந்தது என கூறியது குறித்து பேசிய அவர்,”இந்த முறை கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறேன்,” எனவும் தெரிவித்தார்.