பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.
இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் மொத்தமாக 780 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது.