டிச.30 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில் எந்த பகுதியில் வைத்து செலுத்தப்படும் என்கிற விவரம் பற்றிய தகவலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி 21:58 IST (இந்திய நேரப்படி இரவு 09.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு சிறிய விண்கலங்களை குறைந்த பூமி வட்ட சுற்றுப்பாதையில் விண்வெளியில் நறுக்குவதைக் காண்பிப்பதை இந்த பணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்க்க விருப்பம் உள்ள பார்வையாளர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள வெளியீட்டு காட்சி கேலரியில் இருந்து காணலாம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்திற்கு சென்றும் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் இரண்டு செயற்கைகோள் என்ன?

வரும் டிசம்பர் 30-ஆம் தேதி செலுத்தப்படவுள்ள இந்த PSLV-C60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட SDX-1 (எஸ்டிஎக்ஸ் 1) மற்றும் SDX-2 ( எஸ்டிஎக்ஸ் 2) எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் 470 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உதவும் முக்கியமான டாக்கிங் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்யப்படுவதற்காக விஞ்ஞானிகள் 66 நாட்கள் நீண்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இப்போது முடித்துள்ளனர். இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்றால் நிச்சயமாக, சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author