கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘கல்கி 2898 AD’, ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.
நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், மீதமுள்ள இரண்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத் தயாரிப்புகளாக இருக்கும் இப்படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.