முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினர். அவரது பிறந்த நாளையொட்டி பலரும் வாஜ்பாய்க்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வலிமையான தேசத்தை கட்டமைக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவரது தொலைநோக்கு சிந்தனையும் திட்டங்களும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது உறுதிமொழிக்கு தொடர்ந்து ஆற்றல் அளிக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.