தேவையான பொருட்கள்:
நெய்- 4 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கப்
உலர் திராட்சை- 100 கிராம்
முந்திரி- 50 கிராம்
பாதம்- 50 கிராம்
பிஸ்தா- 50 கிராம்
பூசணி விதை- 50 கிராம்
ஏலக்காய்- 6
பேரிச்சம் பழம்- 150 கிராம்
செய்முறை:
கடாயில் நிலக்கடலையை போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும். பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.
அதன்பிறகு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள். பின்னர் மீண்டும்பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், பூசணி விதையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஏலக்காயையும் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர அனைத்து பொருட்களை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின்னர் லட்டு போன்று உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.