தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது.
இது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2.20 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகப்புக்கு ஜனவரி 9-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முற்பகல் 100 பேருக்கும் பிற்பகல் 100 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகல் 200 பேருக்கும் டோக்கன் வழங்கப்படும்.
மேலும் அதில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையை பெற விரும்புபவர்கள் இந்த டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும்.