நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர்.
இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத குழுக்களுக்கு, ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சொகுடா மாகாணம் சிமிலியில் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அவர்கள் சரமாரியாக குண்டுகளை வீசினர். ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்களான 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கிளர்ச்சியாளர்கள் என்று நினைத்து தவறுதலாக நடத்திய தாக்குதலால் இவர்கள் இறந்துள்ளனர் என்று நைஜீரியா ராணுவம் தெரிவித்துள்ளது.