இந்தியா மற்றும் சீனா இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நிலவி வந்த நிலையில் சமீபத்தில் தான அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. சமீபத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் படைகளை திரும்ப பெற்ற நிலையில், பின்னர் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் சார்பில் இந்தியா மற்றும் சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை லெப்டினன்ட் ஜெனரல் ஜித்தேஷ் பல்லா திறந்து வைத்துள்ளார். அதாவது இந்திய மன்னர் சிவாஜியின் அசைக்க முடியாத உறுதியை கொண்டாடும் விதமாகவும், அவருடைய சாதனைகள் இளம் தலைமுறையினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சிலை நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையுடன் இந்திய ராணுவத்தினர் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.