அரசியலமைப்பு சட்டத்தை எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது.
அரசியலமைப்பு சட்டம் தற்போது 18 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டில் மைதிலி மற்றும் சமஸ்கிருதத்தில் அச்சட்டம் மொழிபெயர்க்கப்பட்டது பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் அரசிலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் அதை மொழிபெயர்க்கும் பணியை மத்திய சட்ட அமைச்சகமும், நீதித்துறையின் அலுவல்பூர்வ மொழிகள் பிரிவும் முன்னெடுத்துள்ளன.