சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 21.5 கோடி டன்னை எட்டக் கூடும். 14வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கடல் கச்சா எண்ணெய், நாட்டின் புதிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 60 விழுக்காட்டுக்கு மேல் வகித்தது என்று தெரிய வந்துள்ளது.
உலகளவில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் 4வது பெரிய நாடு சீனா ஆகும். இவ்வாண்டில் சீனாவின் எரிவாயு உற்பத்தி 26 ஆயிரம் கோடி கனமீட்டரை எட்டக் கூடும். அது, 13வது ஐந்தாண்டு திட்டக் கால இறுதியில் இருந்ததை விட 35 விழுக்காடு அதிகம்.
சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாரியத்தின் துணை தலைவர் ஹூ ஜியேன் வூ கூறுகையில், 14வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், சீனாவின் எண்ணெய் மற்றும் இயற்கைய எரிவாயு அகழ்வு பணிகள் சுறுசுறுப்பாக உள்ளன. அவற்றில் கிடைத்த அறிவியல் புத்தாக்கச் சாதனைகள், தேசிய எரியாற்றல் பாதுகாப்புக்கும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் உறுதியான உத்தரவாதம் அளித்துள்ளன என்று தெரிவித்தார்.
படம்:VCG
