நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி…

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த மதகத ராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் காணப்பட்டார். அவரை படக்குழுவினர் கைத்தாங்கலாக பிடித்து சேரில் அமர வைத்தனர்.

இதனால் நடிகர் விஷாலுக்கு என்ன ஆனது என்று அவருடைய ரசிகர்கள் பதறிய நிலையில் வைரஸ் காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை வைரஸ் காய்ச்சலால் நடிகர் விஷால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில காலங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இந்நிலையில் நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்த போது மாறுகண் இருப்பது போல நடித்தார். அப்போதிருந்தே அவருடைய கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால ஸ்டீராய்டு போன்ற சிகிச்சைகளை பல வருடங்களாக எடுத்து வந்ததால் அவருக்கு தலைமுடி கொட்டி இப்படி கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் அவர் சில காலங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author