கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவரை மார்ச் 9 ஆம் தேதி தனது புதிய தலைவரை தேர்வு செய்யவிருப்பதாக கனடாவின் ஆளும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
தலைமைப் போட்டிக்கான கட்டமைப்பையும் விதிகளையும் அமைப்பதற்காக கட்சியின் தேசிய இயக்குநர்கள் குழு கூடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ட்ரூடோ, தனது பதவிக்கு மாற்று தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது பதவியில் நீடிப்பார்.