ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் மாயம்  

திங்களன்று ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் கொண்ட கப்பல் பணியாளர்களை காணவில்லை.
அந்த எண்ணெய் டேங்கர் முழுவதுமாக காணாமல் போனதாக சுல்தானகத்தின் கடல்சார் பாதுகாப்பு மையம் (எம்எஸ்சி) தெரிவித்துள்ளது.
மற்ற மூன்று பணியாளர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.
கொமொரோஸ் கொடியுடன் சென்ற அந்த எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் டுக்ம் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்தது.
டுக்ம் துறைமுகம் ஓமானின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, சுல்தானட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களுக்கு அருகில் உள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author