நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.