யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் – அண்ணாமலை வரவேற்பு!

Estimated read time 0 min read

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

“மத்திய அரசின் நிதியுதவியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு, இலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதப் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு, நமது தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

600 இருக்கைகள் கொண்ட அரங்கு, திறந்தவெளி மைதானம், கணினி நூலகம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய இந்த மையத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டியிருப்பது, திருவள்ளுவரின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் வாய்ப்பாகவும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கலாச்சார உறவை மேலும் வலிமையாக்கும் படியாகவும், அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author