புதிய கட்சி கொடி அறிமுகம்- அசத்தும் சசிகலா

Estimated read time 1 min read

கமுதியில் இன்று சசிகலா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோழி சசிகலா இன்று நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் சசிகலா தனியாக கட்சி அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் இடையே பேச்சு பரவலாக உள்ளது. இந்நிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தில் களம் காண்போம், அம்மாவின் நான் ஆட்சி அமைப்போம் என்ற பேனர்களோடு மாநாட்டு திடலில் 50க்கும் மேற்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் புதிய கொடி கட்டப்பட்டுள்ளது.

அதிமுக கொடி போல இருக்கும், ஆனால் அண்ணா ஜெயலலிதா உருவம் கொடியில் இடம்பெறவில்லை. “களம் காண்போம்.. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” – என்ற வாசகங்கள் மாநாட்டு பந்தலில் உள்ள பேனரில் இடம் பெற்றுள்ளன.

இன்று மாலை நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் கூட்டத்திற்கு சேர்கள் போடும் பணி மற்றும் ஸ்டேஜ் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று ஐந்து வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளில் மேடையில் 20 பேருக்கு மட்டும் வழங்கப்படும் மற்றவை நேரில் கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author