தமிழகத்தில் முக்கியமாக தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு மற்றும் மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இது போன்ற மோதல்களை தடுப்பதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது.
இது தொடர்பான பரிந்துரையில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் ஜாதி பெயர் இடம் பெறக் கூடாது உள்ளிட்டா பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் மத்தியில் சாதிய வன்முறைகள் இனி தடுக்கப்படும் என்றும் தமிழக அரசு இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.