வசந்த விழா சிறப்புப் போக்குவரத்து துவக்கம்

Estimated read time 1 min read

2026ம் ஆண்டின் வசந்த விழா சிறப்புப் போக்குவரத்து பிப்ரவரி 2ம் நாள் துவங்கி, மார்ச் 13ம் நாள் வரை 40 நாட்கள் நீடிக்கும். இக்காலக்கட்டத்தில் 54 கோடி பேர், ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்றும், தினமும் சராசரியாக 1 கோடியே 34 இலட்சத்து 80 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் மதிப்பிடப்பட்டது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.0 விழுக்காடு அதிகம்.

நாடளவில் 120 ரயில் நிலையங்களில் வசதியான ரயில் மாற்றம் சாத்தியமாகும். 91 நிலையங்களில் இணையம் வழியாக உணவு பார்சல் பதிவு செய்யப்படலாம். இதற்கிடையில், அமைதியான பெட்டிகள், செல்ல விலங்குகளுக்கான பயணச் சேவை முதலிய சிறப்பு சேவைகள், பயணிகளுக்குப் பயனுள்ள முறையில் உதவி அளிக்கின்றன.

படம்:VCG

You May Also Like

More From Author