பிப்ரவரி 2ஆம் நாள் உலக சதுப்பு நிலத் தினமாகும். கடந்த சில ஆண்டுகளில், சதுப்பு நிலங்களின் உயிரின சுற்றுச் சூழலை சீனா தொடர்ந்து சீராக்கி வருகிறது. தற்போது சீனாவின் சதுப்பு நிலப் பரப்பளவு ஆசியாவில் முதலிடத்தையும் உலகில் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
சீனா சதுப்பு நில மேலாண்மை அமைப்புமுறையை உருவாக்கி அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. சீனாவில் தேசிய நிலை சதுப்பு நிலப் பூங்காக்களின் எண்ணிக்கை 903 ஆகும். அவற்றில் 90 விழுக்காட்டுப் பூங்காக்கள் பொது மக்களுக்கு இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 32 கோடி சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர்.
சதுப்பு நிலம் பூமியின் மூன்று உயிரின தொகுப்புகளில் ஒன்றாகும். ஈடிணையற்ற உயிரினம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ஈடிணையற்ற மதிப்பு சதுப்பு நிலத்திற்கு உண்டு.
